Someone In Seoul - TAMIL LYRICS

*Translation by Sarojini (TW@BTStamilnadARMY) & Vishali (IG@dark__chocolate07)
இருவழி பாதை எதிரே நின்று இன்னும் யோசித்து கொண்டு இருக்கிறாய்எங்கே செல்வதென்று.மேலே பார், ஏனெனில் வானம் இன்னும் நீலமேமனவலிகள், அதனை விழுங்கினாய் தவறுகள், அதை கண்டு அச்சமுற்றாய் என்னை நம்பு, அந்த இடத்தில் இருந்திருக்கின்றேன் 
பரவாயில்லைகொஞ்சம்ஓய்வெடு..தெரிந்துகொள் உன் கனவுகள், அவை உனக்காக காத்திருக்கலாம் நீ ஓய்வெடுக்கலாம்இடைநிற்கலாம்..பின்பு ஏற்றுக்கொள்இது போன்றத் தருணங்களும் வாழ்வில் இருக்கும் 
குறைகள் இன்றி வாழ்வில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் மற்றவர் சொன்னது போல் கதிரவன் மறையத்தான் வேண்டும் எழுவதற்கு முன்னால்..எனவே தலை தாழ்த்தாதே நிமிர்ந்து பார்அப்போது உனக்குத் தெரியும்சியோல் -இல் ஒருவர் இருக்கிறார்உன்னைப் புரிந்து கொள்ள என்றுபரவாயில்லை , அக்கரங்களை  நீ பற்றிக் கொள்ளலாம்..கைவிட்டு விடாதே
உன் முழு வலிமையுடன் போராடி இருப்பதினால்இன்றிரவு நல்ல ஓய்வெடுஏனெனில் நிலவிடம் உன்னைப் பற்றிக் கூறியிருக்கிறேன்கண்ணீர் மறைக்க சிரிப்பை உதிர்த்ததும் நீ ஆனால்  உனக்குள் இருக்கும் ஒளி கொண்டு அச்சங்களை எதிர்த்துப் போராடியதும் நீ சத்தியமாகச்  சொல்கிறேன் நீ இருப்பதினாலே, இவ்வாழ்வு பேரழகாகிறது..
பரவாயில்லைமெதுவாகவேசெல்..சென்று உனக்கேற்ற வேகத்தில் இந்த வாழ்க்கையை வாழ் பின்தங்கி விட்டோம் என்ற ஐயம் உனக்கு  ஏற்படலாம்  ஆனால் செல்லமே, வாழ்க்கை பந்தயமல்லவே!
குறைகள் இன்றி வாழ்வில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் மற்றவர் சொன்னது போல் கதிரவன் மறையத்தான் வேண்டும் எழுவதற்கு முன்னால்..எனவே தலை தாழ்த்தாதே நிமிர்ந்து பார்அப்போது உனக்குத் தெரியும்சியோல் -இல் ஒருவர் இருக்கிறார்உன்னைப் புரிந்து கொள்ள என்றுபரவாயில்லை , அக்கரங்களை  நீ பற்றிக் கொள்ளலாம்..
அப்பந்தயம் உன்னை மண்டியிட வைக்கும் பொழுதுஉன் பார்வையை என் மேல் வை..மூன்று வரை எண்ணலாம் நாம்..இந்த உலகமே "ஓடு" என்று கூச்சலிடும்  போதுநீ கைவிடுவதும் உன் தைரியமென கொள்வாய், தோழமையே !!
இவ்வொருமுறை மட்டும்உன்னைத் தூக்கி நிறுத்துஇன்னும் ஒருமுறை மட்டும்~~~இன்னும் ஒருமுறை மட்டும்~~~
குறைகள் இன்றி வாழ்வில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் மற்றவர் சொன்னது போல் வீழ்ந்தால் தான் எழ முடியும் எனவே உனக்கான நேரத்தை நீ எடுத்துக்கொள்எல்லாம் நலமே என்பதை நினைவில் கொள் சியோல் -இல் இருக்கும் அந்த ஏழுவரும்உன் வலி அறிவர் ஒரு நாள் வரும்உன்னை அணைத்துக் கொள்"பரவாயில்லை"தொடக்கம்அது தொடங்கும் ஏதேனும் ஒன்று முடிந்த பின்பே ஏனெனில் நீ கடந்து வந்த பாதை மிக தூரம் நிச்சயம் இல்லா பாதை வழி வந்த ஒரு பயணம் அங்காங்கே இருந்தாலும் , தனிமையை அறியோம் நம் மனங்களின் வழியே, ஒரே இல்லம் கண்டோம்இதை நீ கைவிட்டு விடாதே 
EmailSpotifyYouTubeTwitterInstagramTikTok